செவ்வாய், 30 அக்டோபர், 2012

முனைவர் அருணா வாழ்வுத் தகவல்கள்




முனைவர்அருணா.இராஜகோபால் (13.01.1940-08.08.2012)

 

 
   தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் கடந்த முப்பது ஏழு ஆண்டுகளாக உழவியல் துறையில் அறிவியலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
   வேளாண்மைப் பல்கலைக்கழகஉழவியல்துறைத்தலைவர்,நீர் நுட்பவியல்மையஇயக்குநர்(1990-94/1998-2000),வெளியீட்டு இயக்ககஇயக்குநர்(1994-1998)ஆகியஉயர்பதவிகளை வகித்தவர்.இந்தியவேளாண்மைஆராய்ச்சிக்கழக(ICAR) மாண்புடைபேராசிரியராக(2001-2003)பணியாற்றினார்.தமிழக தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் வேளாண்மை மேம்பாட்டு உயர்மட்டகுழுவின் நீர் வள வல்லுநர்(2007-2010), தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக்குழு(2005)கோவைபாரதியார் பல்கலைக்கழகஆட்சிக்குழு(2002-2005),.தமிழ்ப்பல்கலைக்கழகஆட்சிக்குழு(1997-2000), மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் (1985-88), தஞ்சை உள்ளிட்ட பல உயர் குழுக்களில் பணியாற்றினார்.
     தமிழக அறிவியல் பேரவை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகக் கலைச்சொல்லாக்கக்குழு, அறிவியல்களஞ்சியக்குழு, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம் போன்ற அறிவியல் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
     திராவிடர்கழத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார். பல்கலைக்கழக பணி ஓய்விக்கு பிறகு கடந்த பதினைந்து ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.  புதிய தமிழகம் கட்சியின் கொள்கை வகுப்பாளராக பணியாற்றிய அருணா மருத்துவர் க.கிருஷ்ணசாமியுடன் இணைந்து உருவாக்கிய கோவை பிரகடனம் தமிழக தாழ்தப்பட்ட மக்கள் விடுதலை வரவாற்றில் மிக முக்கிய ஆவணம்.
இவர் எழுதிய நூல்கள்


  • ·தோட்டவளம் (1978)
  •   தோட்ட இயல் நெறிகள் (2000)
  •    பிற்படுத்தப்பட்டோர் விடுதலையும் அம்பேத்கரும் (1994)
  •        மொழி இறைஇயல் ச்முதாய தளங்களில் பாவாணரின்     பங்களிப்புக்கள் (2007)
  • நெற் பயிர்  விளை மூர்க்கரோடு இணங்கேல் (2010)


நூற்றுக்கு மேற்பட்ட அறிவியல்தமிழ் கட்டுரைகளையும்,80க்கும் மேற்பட்ட ஆங்கில அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் பெற்ற விருதுகள்


  •    இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற தமிழ்ச்சான்றோர்   விருது(2005)
  • சிறந்த நீர் நிர்வாக ஆராய்ச்சியாளர் விருது(1999)
  • சிறந்த நூல் விருது
  • தமிழக அரசின் சிறந்த வேளாண்மை நூல் விருது(1980)
  • சிறந்த வேளாண்மை ஆராய்ச்சியாளர் விருது(1991)
  • சிறந்த உழவியல் ஆராய்ச்சியாளர் விருது(1969)


வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஜாம்பியா(1982) இலங்கை(1982) அமெரிக்க ஐக்கிய நாடுகள்(1986) சிம்பாவே(1998) பிலிப்பைன்ஸ்(1991) பல்கேரியா(1992) ஸ்வீடன் (1992/1998) ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.



மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சிக்குழு, கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகthத் துணைவேந்தர் தேர்வுக்குழு உள்ளிட்ட பல உயர் குழுக்களில் பணியாற்றினார். இக்குழுக்களில் பணியாற்றிய போது தாழ்த்த்ப்பட்ட மக்களுக்கான கல்விசார்/ சார் பணியிடங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தமிழக சட்டமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியதன் மூலம் தமிழக் அரசுக்கல்லூரிகள்,கோவை சி.பி.எம் கல்லூரி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகthம், பாரதியார் பல்கலைக்கழகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி அமைப்புகளில் 800 உதவிப்பேராசிரியர்கள் (Baglog/ Shortfall Vacancies) உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய போது மாணவர் சேர்க்கை, ஆசிரியர் தேர்வு/ பணியாளர் தேர்வுகளின் போது பட்டியல் இன மக்களுக்கான உரிமைகளைக் கோருவதில் தீரமுடன் செயலாற்றினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக